Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குளச்சலில் ‘சிப்பி’ மீன் சீசன் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கு மே...

குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இவற்றின் மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய்மீன், சூரை, நெத்திலி, சாளை உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ‘.தோடு’ எனப்படும் சிப்பி மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. 
முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருகின்றனர். 

குமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், கடியப்பட்டணம், சின்னவிளை, இனையம், மேல்மிடாலம் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 
நேற்று முன்தினம் குளச்சல் பகுதியை சேர்ந்த 50 மீனர்வர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். சிப்பி மீன் இந்த வருடம் குறைவாகவே உள்ளது, நேற்று கரைக்கு எடுத்து வரப்பட்ட 500 எண்ணிக்கை கொண்ட ஒரு கூடை சிப்பி மீன் ரூ. 1800 விலை போனது. நேற்று முன்தினம் ரூ. 3500 க்கு விலை போனது. 
சிப்பி மீன்களுக்கு கேரளா ஓட்டல்கள் மற்றும் மதுபான பார்களில் நல்ல மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். இந்த வருடம் கேரள வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...