குமரி மாவட்டம் புதுக்கடை பனவிளை காடன்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 75). இவரும், இவரது குடும்பத்தினரும் ஒரு காரில் வேளாங்கண்ணி ஆல...
குமரி மாவட்டம் புதுக்கடை பனவிளை காடன்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 75). இவரும், இவரது குடும்பத்தினரும் ஒரு காரில் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றனர்.

காரில் 10 பேர் பயணம் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நேற்று புறப்பட்டனர். சுங்கான்கடையை அடுத்த தோட்டியோடு அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த டெம்போவும், காரும் பயங்கரமாக நேருக்கு நேராக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பாகம் சேதமடைந்தது.
காரில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்ததால், காரில் இருவந்தவர்கள் ஒருவருக்கு மேல் ஒருவராக விழுந்தனர். இதில் காரில் இருந்த தேவேந்திரன், அவரது மனைவி குளோரிபாய், ஆலன்றோஸ், அவரது 4 மாத பெண் குழந்தை ஆலன்ரியா உள்பட 10 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. மற்ற 9 பேருக்கும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments