குமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில், காவலர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். காவல் நிலைய சுற்றுவட்டார பகுதிகளி...
குமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில், காவலர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

காவல் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்தனர். அகற்றப்பட்ட குப்பைகளை ஓரிடத்தில் குவிக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது.

இந்த தூய்மை பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியை தொடர்ந்து, காவல் நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

கருங்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தங்கராஜ், ஏற்கனவே மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு சமூக நலன்களை செய்து வந்தார்.
மணவாளக்குறிச்சி பகுதியில் இருந்த கார் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் அரசு பேருந்து நிறுத்துமிடங்களை ஒழுங்குபடுத்தி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி செயல்படுத்தினார்.

மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, மண்டைக்காடு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சமூக விரோத செயல்களை கண்காணிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அனைத்து சமுதாய மக்களிடமும் அன்பாக பேசி, பொதுமக்களிடம் நல்லதொரு நல்லிணக்கத்தை உருவாக்கினார்.
தற்போது, இன்ஸ்பெக்டர் தங்கராஜ், அவரது சமூக பணியை கருங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டு வருகிறார்.
செய்தி மற்றும் போட்டோஸ் உதவி
சாதிக் அலி
No comments