முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசா...
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93) வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சேலம் மருத்துவமனையில் நேற்று காலமானார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் மறிவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் சென்றார்.
அங்கு முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயாரின் இறப்பையடுத்து, இன்று தூத்துக்குடி, நாளை கன்னியாகுமரி, விருதுநகரில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கடி தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்று தாயார் தவசாயி அம்மாளை அக்கறையுடன் கவனித்து வந்தார்.
அவரது மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரின் தாயாரின் மறைவு செய்தி கேட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
No comments