ஆளூர் பேரூராட்சி அதிமுக செயலாளருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை குலாளர் தெருவ...
ஆளூர் பேரூராட்சி அதிமுக செயலாளருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை குலாளர் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ரோஸ்லின் பிரேமலதா என்ற லதா சந்திரன் (வயது 49). அளூர் பேரூர் அதிமுக செயலாளராக உள்ளார்.
இவர் அளூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர். வீரநாராயணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் லதா சந்திரனை பற்றி அவதூறாக எழுதப்பட்டு இருந்ததுடன், குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் அரசியலை விட்டு ஓடிவிடு, கட்சியில் கெட்ட பெயருடன் உன்னை வெளியேற வைப்பேன். நீ எங்கு செல்கிறாய் என்பதை ஆள் வைத்து நோட்டமிட உள்ளேன். உன்னை வாழவிடமாட்டேன் எனவும் எழுதப்பட்டு இருந்தது.
இதுகுறித்து லதா இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக மணிக்கட்டி பொட்டல் உடையப்பன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் இந்த கடிதத்தை எழுதி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 506 (ii) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ராகவனை தேடி வருகின்றனர்.
No comments