கேரளாவில் 95,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த திட்டம் உள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய பினராயி ...
கேரளாவில் 95,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த திட்டம் உள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய பினராயி விஜயன், 'கொரோனா பரவலால் மாநிலத்தில் வேலையில்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. வேலையின்மை காரணமாக மாநிலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதனால் இந்தாண்டு டிசம்பருக்குள் 50,000 புதிய வேலை வாயப்புகள் ஏற்படுத்தி தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.கல்வித்துறையை பொறுத்தவரை கல்லூரிகள், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்திலும் 8,350 வேலவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பொதுப்பணித் துறையில் 5,000 பணியிடங்களும், பொதுத் துறை நிறுவனங்களில் 1,761 பணியிடங்களும் உருவாக்கப்படும். தொழில்த்துறையில் 23,100 பேரும், பொது நிறுவனங்களில் 1,760 பேரும் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து வேலைவாய்ப்புகளும் மக்களுக்கு 100 நாட்களில் கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது தவிர 4,053 பேர் சிறுதொழில்கள் துவங்க கடன் உதவி வழங்கப்பட உள்ளது. 700 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுவதுடன் புதிதாக 4,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும்.
மேலும் கூட்டுறவுத் துறையில் 17,500 பேரும் குடும்பஸ்ரீயில் 15,441 பேரும் வேலை வாய்ப்பு பெறும் வகையிலும் அரசு திட்டம் வகுத்துள்ளது' இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
No comments