மணப்பாறை அருகே திருமண நிகழ்ச்சியில் நித்யானந்தாவை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் , மண...
மணப்பாறை அருகே திருமண நிகழ்ச்சியில் நித்யானந்தாவை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் , மணப்பாறை அருகே மேலமஞ்சம்பட்டியைச் பட்டியை சேர்ந்த சங்கர், கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு புதுக்கோட்டை, விராலிமலை அருகே உள்ள அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த திலகவதி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பின்னர் திருமணத்திற்காக மணமக்களை வாழ்த்தும் விதமாக மாப்பிள்ளை தோழர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் காவல்துறையால் தேடப்படும் நித்யானந்தாவின் போட்டோவை வைத்து, அதில் No சூடு, No சொரணை என்ற வாசகமும், "பல வருஷமா கன்னித்தீவு தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க? கன்னிகளை வச்சு ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்க!" என்ற வசனமும் இடம்பெற்றிருந்தது.
இது திருமணத்திற்கு வந்த அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பேனரில் நித்யானந்தா போட்டோவிற்கு கீழே மாப்பிள்ளை தோழர்கள் 17 பேரின் புகைப்படங்களும், அவர்கள் அனைவரும் கைலாசம் செல்லவிருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த செய்தி ஊர் முழுக்க பரவத் தொடங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நித்யானந்தாவின் புகைப்படம் பொருத்தப்பட்ட பேனரை அங்கிருந்து அகற்றினர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
No comments