வேலைதேடி வந்த வாலிபர்களை வெட்டி பணம் பறிக்கும் கும்பலால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு ந...
வேலைதேடி வந்த வாலிபர்களை வெட்டி பணம் பறிக்கும் கும்பலால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் பைக்கில் சுற்றி வரும் மர்ம கும்பல்கள் பஸ்நிறுத்தம், நடந்து செல்கின்றவர்களை அரிவாள் மூலம் வெட்டி பணம் பறித்து செல்கின்றனர்.

திருச்சி லால்குடி பகுதி சிவா 39. கொரோனா நோய் மூலம் வேலை இல்லாது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கஷ்டபட்டு வந்ததால் குமரி மாவட்டத்தில் வேலை கிடைக்கும் என்று எண்ணி காவல்கிணறு வரை பஸ்சில் வந்தார். நாகர்கோவில் வர தோவாளை வரும் போது நேரம் ஆகி விட்டது.
எனவே, பஸ்நிறுத்தத்தில் படுத்து உறங்க அப்பொழுது பைக்கில் வந்த கும்பல் மிளகாய்பொடி தூவி அரிவாளால் வெட்டி பணம் மற்றும் பையை தூக்கி சென்றது. காயம்பட்ட சிவா சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தார். பொதுமக்கள் பார்த்து தகவல் அளித்ததால் சிவாவை போலீஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதுபோல் ஔவையார் அம்மன் கோவில் அருகே பயங்கர காயத்துடன் கிடந்தவரை தகவல் அடிப்படையில் போலீஸ் விசாரணை செய்ததில் கோயம்புத்தூரில் இருந்து வேலை தேடிவந்த ராஜேஷ்வரன் என தெரியவந்தது. மர்மகும்பல் வெட்டி பணம் பறித்து சென்றது என தகவல் தெரிய போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள்.
ஒரேநாளில் இருசம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீஸ் கண்காணிப்பு கேமரா மூலம் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
No comments