கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புபணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சோதனை சாவடிகளில் 24 மணிநேரமும் சுழற்சி முற...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புபணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சோதனை சாவடிகளில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசாருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குளச்சல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார்.
இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அவர் பணியாற்றிய காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், காவலர்கள் உள்பட அனைவருக்கும் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.
அதேபோல் அவரது குடும்பத்தினருக்கும் சளி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments