மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் தோனிமுக்கு தெருவை சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் தோனிமுக்கு தெருவை சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி சஜிதா (வயது 26), இந்த தம்பதிக்கு 3 மற்றும் 5 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 12-ம் தேதி பிரிட்டோ தொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் காணவில்லை.
பலஇடங்களில் தேடியும் பலனில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, சஜிதா குழந்தைகளுடன் ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரிட்டோ வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான தாய் மற்றும் 2 குழந்தைகளையும் தேடிவருகின்றனர்.
No comments