வருவாய் இன்றி தவிக்கும் 210 இசை கலைஞர்களுக்கு கொரோனா தொகுப்பு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான நாதஸ்வர கலைஞர்கள் உள்ளனர். ...
வருவாய் இன்றி தவிக்கும் 210 இசை கலைஞர்களுக்கு கொரோனா தொகுப்பு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான நாதஸ்வர கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் போன்ற சுபகாரியங்களில் இசைநிகழ்ச்சி நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இருமாதங்களாக கொரோனா நோய் தொற்றுகாரணமாககோயில் திருவிழா மற்றும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்சிகள் நடக்காததால் நாதஸ்வர கலைஞர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.எனவே வருவாய் இன்றி வாடும் நாதஸ்வர கலைஞர்களுக்கு கொரோனா தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தென்தாமரைகுளம் வடக்கு ஜங்ஷனில் நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில் ஏராளமான நாதஸ்வர கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைகருவிகளை இசைத்தப்படி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் அங்குள்ள சுடலைமாடசுவாமி கோயில் வளாகத்தில் வைத்து நாதஸ்வர கலைஞர்களுக்கு அரிசி,காய்கறி,மிளகுபொருட்கள் அடங்கிய கொரோனா தொகுப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் தென்தாமரைகுளம் மருத்துவ சமுதாய நிர்வாகிகள் மற்றும் அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள்,டாக்டர் தேவசுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments