Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

வாகனங்களை ஓட்ட அனுமதி கிடைத்தும், ஓட்டம் இல்லாததால் டிரைவர்கள் வருமானம் இன்றி தவிப்பு

கடந்த 11 வாரங்களாக கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மக்களை காக்கும் விதத்திலும் சுகாதாரத்தை பேணிக்காக்கும் மத்திய-மாநில அரசுகள் 1...

கடந்த 11 வாரங்களாக கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மக்களை காக்கும் விதத்திலும் சுகாதாரத்தை பேணிக்காக்கும் மத்திய-மாநில அரசுகள் 144 ஊரடங்கு தடை உத்தரவை பிறப்பித்தது.
இதனால் மக்கள் சமூக இடைவெளியுடன் வாழவேண்டும் என்ற சிந்தனையில் வீட்டுக்குள் முடங்கினர்.கடைகள் அடைக்கப்பட்டது. பஸ்கள் ஓடவில்லை.

ஆட்டோ ,டெம்போ, மினி டெம்போ ஆகியவையும் ஓடவில்லை. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர கிராம பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கார்கள், வேன்கள் ஓடுவது தடையானது.பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் சரிவர இயங்காததால் டிரைவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஊரடங்கு தளர்வு உத்தரவுக்கு பின் டெம்போ, மினி டெம்போக்களில் ஊர்கள் தோறும் காய்கறி வியாபாரமும் நடந்தது. ஆனால் டாக்சிகள், வேன்கள் ஓடவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், இரணியல், திங்கள்சந்தை ,குலசேகரம், திருவட்டார், சாமியார் மடம், இரவிபுதூர்கடை, மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, கொல்லங்கோடு, திருவிதாங்கோடு, அழகியமண்டபம், மேக்காமண்டபம், சித்திரங்கோடு, குமாரபுரம் உள்பட பல பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேன்கள்,கார்கள் , டெம்போகள் ஓடுகின்றன. ஊரடங்கு தளர்வான நிலையில் வாகனங்களை இயக்கலாம் என அரசு அறிவித்தது. கடந்த இரண்டு மாதங்களாக வாழ்வின்றி தவித்த ஓட்டுநர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். வாகனங்களை களமிறங்கினர்.

திருமணங்கள் சமூக இடைவெளியுடன் நடப்பதாலும் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளதால் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்ல முடியாததாலும் டாக்சி மற்றும் வேன்கள் ஓடவில்லை. குறிப்பாக களியக்காவிளையை தாண்டி கேரளாவுக்கு கார்களை கொண்டு செல்ல முடியாததால் மிகவும் கவலை அடைந்துள்ளனர் .மேலும் சித்திரை வைகாசி விழாக்கள் நடக்காததாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கார், வேன் ஆகிய வாகனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு உத்தரவிட்டதாலும் எவருமே கார் மற்றும் வேன்களில் செல்ல விரும்பவில்லை.
கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் எந்த பகுதியை பார்த்தாலும் டிரைவர்கள் முக கவசம் அணிந்த படி காலை முதல் மாலை வரை வருமானம் வருமா என்ற கேள்வியுடன் காத்து கால்கடுக்க காத்து நிற்கின்றனர். கொரோனா வைரஸ் இவர்களை என்றுதான் பசியார நிரந்தரமாக வழிகாட்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்