நாகர்கோவிலில் விபத்தில் காயமடைந்த கணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி நர்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத...
நாகர்கோவிலில் விபத்தில் காயமடைந்த கணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி நர்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் சுங்கான்கடை அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேணு செல்வம் (வயது 31), லாரி டிரைவர். இவருடைய மனைவி சுபா ஆனந்தி (20), ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேணு செல்வம் ஆஸ்பத்திரியில் இருந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பார்வதிபுரம் கட்டையன்விளை பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வேணு செல்வம் பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சுபா ஆனந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி-மோட்டார் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
No comments