''கொரோனாவுக்கு எதிரான போரில் சிறுபான்மையினரும் சமபங்களிப்பை வழங்கி வருகின்றனர்'' என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்...
''கொரோனாவுக்கு எதிரான போரில் சிறுபான்மையினரும் சமபங்களிப்பை வழங்கி வருகின்றனர்'' என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனாவுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒற்றுமையாக போராடி வெற்றி காண வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி சமூகத்தின் இதர மக்களுடன் சிறுபான்மையினரும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.
வக்ப் வாரியங்கள் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களின் நிவாரண நிதியத்திற்கு 51 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. அத்துடன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குகின்றன. கொரோனா பாதித்தோரை தனிமையில் வைக்க 16 ஹஜ் இல்லங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திறன் பயிற்சி பெறுவோர் தயாரிக்கும் முகக் கவசங்கள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.அலிகர் முஸ்லிம் பல்கலை.
பிரதமர் நிவாரண நிதிக்கு 1.20 கோடி ரூபாய் வழங்கியதுடன் 100 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை நடத்தியுள்ளது. அதுபோல தர்கா குழுவினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments