எஸ்பிஐ (State Bank of India: SBI) வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என அந்த வங்கி தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்...
எஸ்பிஐ (State Bank of India: SBI) வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என அந்த வங்கி தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் பராமரித்து வருகின்றனர். இது பெருநகரங்களில் ரூ.5 ஆயிரமாகவும், மற்ற பகுதிகளில் ரூ.3 ஆயிரமாகவும் இருந்தது. குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.
வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments