சென்னை திருவெற்றியூரை சேர்ந்தவர் ஜி.பாலாஜி (வயது 41). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ச்ற்றுசூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை...
சென்னை திருவெற்றியூரை சேர்ந்தவர் ஜி.பாலாஜி (வயது 41). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ச்ற்றுசூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 1-ம் தேதி சென்னை திருவெற்றியூரில் உள்ள வடியுடையம்மன் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய பாலாஜி முதல் நாள் பயணத்தை கருங்குழி என்ற இடத்தில் நிறைவு செய்துள்ளார்.
மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, விராலிமலை, மேலூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, வள்ளியூர், கூடங்குளம் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை வந்தடைந்தார்.
மொத்தம் 730 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணம் குறித்து பாலாஜி கூறுகையில், சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் வாகனங்கள் அதிகரித்துள்ளன. மோட்டார் வாகன பயன்பாடுகளை குறைத்து விட்டு, உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கும் சைக்கிள் பயன்பாட்டை விளக்கும் வகையில் எனது பயணத்தை மேற்கொண்டேன்.
நான் எண்ணியதுபோல் இந்த பயணம் எளிதாக அமையவில்லை. பல சவால்களையும், சஞ்சலங்களையும் தந்தது. முகம் தெரியாத பலரின் உதவிகள் கிடைத்தன. நண்பர்கள், உறவினர்கள் எனது பயணத்துக்கு உறுதுணையாக இருந்து எனக்கு உதவினர்.
அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இளைஞர்கள் பெரும்பாலும் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
No comments