திங்கள்நகர் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர் (வயது 54). இவர் இரணியல் கோர்ட்டில் குமஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். இவ...
திங்கள்நகர் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர் (வயது 54). இவர் இரணியல் கோர்ட்டில் குமஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார்.

தற்போது அந்த வாழை குலை 9 அடி உயரத்திற்கு உள்ளது. தொடர்ந்து காய்கள் வந்து கொண்டு இருப்பதால் நிலத்தில் தட்டாமல் இருக்க குழி தோண்டி வைத்துள்ளார்.
தற்போது குலையின் மேல்பகுதியில் உள்ள காய்கள் பழுத்து வருகின்றன. இது பற்றி ஜெயசேகர் கூறுகையில், எனது நண்பர் ஒட்டு ரகம் என கூறி ஒரு கன்று தந்தார். அதனை நட்டு பராமரித்து வந்தேன். அது தற்போது 9 அடி நீளத்திற்கு குலை தள்ளி உள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, அதிசயமாகவும் உள்ளது.
இதனை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து செல்கின்றன. இந்த வாழையின் கன்றை தங்களுக்கு தர வேண்டும் என்று ஏராளமானவர்கள் கேட்டு வருகிறார்கள் என்றார்
No comments