குமரி மாவட்டத்தில் 2 வழித்தடங்களில் சிவப்பு கலர் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று நாகர்கோவில் – மணவாளக்குறிச்சி - குளச்சல் வ...
குமரி மாவட்டத்தில் 2 வழித்தடங்களில் சிவப்பு கலர் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று நாகர்கோவில் – மணவாளக்குறிச்சி - குளச்சல் வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரசு டவுன் பஸ்கள் அனைத்தும் பொங்கல் பண்டிகை முதல் சிவப்பு கலரில் மாற்றப்பட உள்ளன எனத் தகவல் வெளியாகி இருந்தது.
முதல் கட்டமாக சென்னையில் சிவப்பு வண்ணப்பூச்சு கொண்ட அரசு பஸ்களை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுக செய்திருந்தது. சென்னையில் 245 சிவப்பு கலர் பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
அதை தொடர்ந்து தமிழகத்தில் பிற நகரங்களிலும் பஸ்கள் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கரூர், பண்டுருட்டி, குரோம்பேட்டை, பொள்ளாச்சியில் சிவப்பு நிற பஸ்கள் கூண்டு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர் அவைகள் மற்ற மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
புதிய சிவப்பு பஸ்களில் இரண்டுக்கு இரண்டு என்ற அடிப்படையில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மேலும் தானியங்கி கதவுகள், முன்புறம் மற்றும் பின்புறம் ஏறி இறங்கும் தாழ்வான படிகட்டுகள் உள்ளிட்ட நவீன சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கும், நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி, குளச்சல் வழியாக ரீத்தாபுரத்திற்கும் என 2 சிவப்பு கலர் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பேருந்துகள் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
No comments