மணவாளக்குறிச்சி அருகே உள்ள மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுமரியான். இவருடைய மகன் ஜெரால்டு ராபர்ட் (வயது 21). இவர் நேற்று முன்தினம்...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுமரியான். இவருடைய மகன் ஜெரால்டு ராபர்ட் (வயது 21).
இவர் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில் பகுதியில் உள்ள புதுக்குளத்தின் பக்கச்சுவரில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததால் தவறி குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஜெரால்டு ராபர்டை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று குளத்தில் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெரால்ட் ராபர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments