Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

வெள்ளிச்சந்தையில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட, காட்டுவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பய...

வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட, காட்டுவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடை பெற்றது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம்,
ரேசன் வாயிலாக 14 வகையான மளிகை பொருட்கள், பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் திட்டம், ஆவின் பால் விலை ரூ.3 குறைத்து வழங்கும் திட்டம், மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், உங்கள் தொகுதியில் முதல் - அமைச்சர் எனும் திட்டம்,

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம்,
மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்