குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் இன்று (10-08-2021) மாலை சுமார் 5:30 மணியில் திடீரென போக்குவரத்து முடக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்...
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் இன்று (10-08-2021) மாலை சுமார் 5:30 மணியில் திடீரென போக்குவரத்து முடக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து தடைபட்டது.

குழித்துறை பகுதியில் இருந்து தண்ணீர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் குழாய் கருங்கல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி வழியாக செல்கிறது.
கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் நீர், அதிக உந்து சக்தியினால் சில நேரங்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுவிடுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீர், ஆற்று தண்ணீர் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் இன்று மாலை வேளையில் மணவாளக்குறிச்சி ஸ்டேட் வங்கி அருகில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டது.
நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக செல்லும் பேருந்துகள் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியிலும், குளச்சல் பகுதியிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பேருந்துகள் பிள்ளையார்கோவில் பகுதியிலும் நிறுத்தப்பட்டன. எந்த வாகனமும் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் பயணிகள் ஊருக்கு செல்ல மிகவும் அவதிபட்டனர். தொடர்ந்து குளச்சல் பகுதிக்கு செல்லும் பேருந்துகள், சந்திப்பு பகுதியில் இருந்து ஆசாரிதெரு, சக்கபற்று, படர்நிலம், பிள்ளையார்கோவில் வழியாக குளச்சலுக்கு சென்றது. இதேபோல் குளச்சலில் இருந்து வந்த பேருந்துகளும் அந்த வழியாக திருப்பிவிடப்பட்டன.
உடைப்பு ஏற்பட்ட குழாய் பகுதியை விரைந்து சரி செய்து போக்குவரத்து சீரான முறையில் இயங்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
Photos
Dysn
Bombay Printers
Manavalakurichi
No comments