குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சி...
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் நீண்ட வரிசையில் காத்து நின்று கடைசி நேரத்தில் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வரிசையில் நிற்காமல் தடுப்பூசி போட ஆன்லைனில் டோக்கன் பெறலாம். இந்த நடைமுறை நாளை முதல் (ஜூன் 28) அமுலுக்கு வருகிறது.
எனவே தடுப்பூசி போட விரும்புகின்றவர்கள் bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் சென்று டோக்கன் பதிவு செய்து கொள்ளலாம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை டோக்கன்களை பதிவு செய்து கொள்ளலாம். அந்த டோக்கனில் தடுப்பூசி செலுத்தும் மையம், நாள், நேரம் மற்றும் டோக்கன் எண் உள்ளிட்டவை இருக்கும்.
பின்னர் இந்த டோக்கனை குறிப்பிட்ட மையத்தில் காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். Kumaricovidcare.in என்ற இணையத்தளத்திலும் இதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டோக்கன் நடைமுறை சிறப்பு முகாம்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு மருத்துவமனைகளில் இந்த நடைமுறை தேவையில்லை. அங்கு எப்போதும் போல் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
No comments