மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள புதுகுளத்தன் கரையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், வயல்கரையை சே...
மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள புதுகுளத்தன் கரையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், வயல்கரையை சேர்ந்த ரத்தினத்துக்கும் (வயது 55) சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு இரணியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் செல்வராஜ் பிரச்சனைக்குரிய நிலத்தில் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்டபோது செல்வராஜுக்கும், ரத்தினத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ரத்தினம் அருகில் கிடந்த டியூப் லைட்டை எடுத்து செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
காயமடைந்த செல்வராஜ் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் ரத்தினம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments