கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மணவாளக்குறிச்சி கிளை ஊடகத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- CAA...
கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மணவாளக்குறிச்சி கிளை ஊடகத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

CAA வும் வேண்டாம் NRC யும் வேண்டாம். மதத்தின் பெயரில் மக்களைப் பிரித்து பாகுபாடு காட்டும் வேறு எந்த சட்டமும் வேண்டாம்.
இந்த கொராணா காலகட்டத்திலும் மக்கள் படும் துன்பத்தை கவனிக்க நேரமில்லாமல் மத்திய அரசானது மக்களுக்கெதிரான CAA, மற்றும் NRC போன்ற கொடுர சட்டங்களை நிறைவேற்றுவதில் குறிக்கோளாக செயல்படுகிறது.
இதை கண்டித்து SDPI கட்சி சார்பில் நேற்று (01-06-2021) தேசம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக SDPI கட்சி மணவாளக்குறிச்சி கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்டிபிஐ குமரி மாவட்ட பொதுச்செயலாளர் மணவை சாதிக் அலி, குளச்சல் தொகுதி செயலாளர் ரிஸ்வான், மணவை கிளை தலைவர் அஸீம், WIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஃபாமிலா, மணவை தமுமுக தலைவர் பகர்தீன், சமூக ஆர்வலர் ராபி, மணவை நிஜாம், மற்றும், மணவை எஸ்டிபிஐ கட்சியின் கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


செய்தி மற்றும் போட்டோஸ்
மணவை அசீம்
கிளைத் தலைவர்
மணவாளக்குறிச்சி
No comments