கோவா அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது மாயமான 11 குமரி மாவட்ட மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமர...
கோவா அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது மாயமான 11 குமரி மாவட்ட மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஜோசப் பிராங்கிளின் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடந்த 9ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 23ஆம் தேதி அன்று கோவா அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு விபத்தில் சிக்கியதால், அதில் இருந்த மீனவர்களின் நிலை குறித்து அறிய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து, மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி, அவரது உறவினர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, கடலோர காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மாயமானதாக கூறப்பட்ட வள்ளவிளையை சேர்ந்த 11 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாயமான படகின் உரிமையாளரான ஜோசப் பிராங்கிளின் இன்று காலை தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், தற்போது லட்சத்தீவு பகுதியில் வந்து கொண்டிருப்பதாகவும், நாளை தேஙகாய்பட்டினம் வந்தடைவோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மீனவர்கள் மீட்கப்பட்ட தகவலை அறிந்து, அவது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக கடலோர காவல் படையினர் மீனவர்களை மீட்டு அழைத்து வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments