நாகர்கோவில் மாநகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்த தற்போது சைக்கிளில் கையால் இயக்கப்படும் பம்ப் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. ...
நாகர்கோவில் மாநகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்த தற்போது சைக்கிளில் கையால் இயக்கப்படும் பம்ப் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொசுக்கள் காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க நாகர்கோவில் மாநகராட்சிக்கு பேட்டரியில் இங்கும் நவீன வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 8 லட்சம் மதிப்பிலான இந்த வாகனத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் கைப்பம்பால் அடிப்பதை 10 நிமிடத்தில் அடித்து முடிக்க முடியும்.
மேலும், அதிக புகை வருவதுடன், இதன் வீரியமும் தற்போது அடிக்கப்படும் மருந்தை விட 3 மடங்கு அதிக செயல்திறனுடன் இருக்கும். இந்த இயந்திரத்தை மாநகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் தொடங்கி வைத்தார்.
ஞாயிறு நீங்கலாக இதர நாட்களில் தினசரி காலை மற்றும் மாலையில் 4 மணி நேரம் மாநகர் பகுதிகளில் இந்த வாகனம் மூலம் மருந்து தெளிக்கப்பட உள்ளது.
No comments