நாகர்கோவில் சட்டசபை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மரிய ஜேக்கப் ஸ்டேனி ராஜா நேற்று நாகர்கோவில் தொகுதியில் உள்ள வட்டக்கரை, தொல்லவிளை, மூ...
நாகர்கோவில் சட்டசபை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மரிய ஜேக்கப் ஸ்டேனி ராஜா நேற்று நாகர்கோவில் தொகுதியில் உள்ள வட்டக்கரை, தொல்லவிளை, மூவேந்தர்நகர், குருசடி, ராமன்புதூர், பொன்னப்பநாடார் காலனி, புன்னைநகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் வெற்றி பெற்றால் படித்த இளைஞர்கள், வறுமையாலும், வேலையின்மையாலும் பாதிக்கப்படும் மக்கள், ஆதரவின்றி தவிக்கும் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், முதியோர் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதோடு வங்கிக் கடன் வழங்கப்படும்.
நாகர்கோவில் புறநகர் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும். தரமான இலவச கல்வி அளிக்கப்படும்.
இவ்வாறு மரிய ஜேக்கப் ஸ்டேனி ராஜா கூறினார்.
No comments