அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்கள் சிலருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளதா...
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்கள் சிலருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் பாஜகவுக்கு வழங்கிய 20 தொகுதிகளில் உத்தேச தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளிவந்ததாக கூறபப்டும் பட்டியலில் உள்ள தொகுதிகள் வருமாறு,
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு உள்பட தமிழகத்தில் ஆயிரம் விளக்கு, துறைமுகம், கோவை தெற்கு, கோவை வடக்கு, மொடக்குறிச்சி, ராமநாதபுரம், திருக்கோவிலூர், திட்டக்குடி (தனி) நெல்லை, காரைக்குடி, தளி, அரவக்குறிச்சி, உதகமண்டலம், தாராபுரம், திருவண்ணாமலை, விருதுநகர் (அ) ராஜபாளையம், திருவையாறு (அ) தஞ்சை ஆகிய தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலை அரவக்குறிச்சிக்கும், குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு, நயினார் நாகேந்திரன் நெல்லை, காரைக்குடி ஹெச்.ராஜா, கோவை தெற்கு வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
No comments