தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் ஒருவர் மாயமானார். நித்திரவிளை அருகே...
தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் ஒருவர் மாயமானார்.

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப், இவருக்கு சொந்தமான ஜீஸஸ் லவ் என்ற பெயரில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகில் தூத்தூர் மண்டல மீனவ கிராமத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் கேரள மாநிலம் புல்லுவிளை பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் என ஒன்பது பேர் தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இரவு 8 மணிக்கு படகில் இருக்கிறவர்கள் சாப்பிட சென்ற போது கேரள மாநிலம் புல்லுவிளை பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (32) என்பவரை காணவில்லை.
இவர் விசை படகில் இருந்து தவறி விழுந்து இருக்கலாம் என்பதால் சக மீனவர்கள் அப்பகுதியில் மாயமான மீனவர் அபிலாஷை தேடி வருகின்றனர்.
No comments