மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.மணல் ஆலை நிர்வாகம் சார்பில் சமூக பொறுப்பின் கீழ் மணவாளக்குறிச்சி பேரூராட்சி பிள்ளையார் கோவில் தாமரைகுளத்தின் கரையில்...
மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.மணல் ஆலை நிர்வாகம் சார்பில் சமூக பொறுப்பின் கீழ் மணவாளக்குறிச்சி பேரூராட்சி பிள்ளையார் கோவில் தாமரைகுளத்தின் கரையில் உடல் தகனம் செய்யும் பொது மயானத்திற்கு செல்ல ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது.

இதனை மணல் ஆலை தலைவர் செல்வராஜன் ஊர் தலைவர் துளசிதாஸ் முன்னிலையில் திறந்து வைத்தார். இதில் மணல் ஆலை அலுவலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இது போல் பெரியவிளை மக்கள் முன்னேற்ற சங்கத்திற்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிட அறையையும், குடும்பனை தூய இக்னேஷியஸ் மேல் நிலைப்பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறை மற்றும் மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்ட 12 சாலை பாதுகாப்பு கண்ணாடிகளையும் ஆலை தலைவர் திறந்து வைத்தார்.
















No comments