கன்னியாகுமரி கடற்கரையில் சிவனுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமே...
கன்னியாகுமரி கடற்கரையில் சிவனுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமேசுவரம் ஆத்மசித்தா் அம்மா மற்றும் அதிமுக மாநில பேச்சாளா் பி.சி.அன்பழகன் ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பழமை வாய்ந்த சிவன்சிலை உள்ளது. இந்த சிவனை நாள்தோறும் ஏராளமானோா் வழிபட்டுச் செல்கின்றனா்.
இந்நிலையில், ராமேசுவரம் ஆத்ம சித்தா் அம்மா மற்றும் அதிமுக மாநில பேச்சாளா் பி.சி.அன்பழகன் ஆகியோா் வியாழக்கிழமை சிவனுக்கு மாலை அணிவித்து வணங்கினா். பின்னா் இருவரும் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு பிரம்மாண்ட கோயில் எழுப்பப்படவேண்டும்.
இது இங்கு வருகைதரும் அனைத்து பக்தா்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பரிசீலனை செய்து சிவனுக்கு கோயில் அமைக்க வேண்டும் என்றனா்.
No comments