முட்டம் பி.எச்.டி தொண்டு நிறுவனம் குமரி மாவட்டத்தில் யானைக்கால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ...
முட்டம் பி.எச்.டி தொண்டு நிறுவனம் குமரி மாவட்டத்தில் யானைக்கால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி முட்டம் அலுவலகத்தில் நிறுவனர் சூசை மரியான் தலைமையில் நடந்தது.
தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜன், மாவட்ட மலேரியா அலுவலர் விஜயகுமார், தேசிய யானைக்கால் நோய் திட்ட அலுவலக கண்காணிப்பாளர் அமலா சோபிதா ஆகியோர் கலந்து கொண்டு 76 நோயாளிகளுக்கு கம்பளி போர்வை, ஹாட் பாக்ஸ்கள் வழங்கினர்.
அனைத்து நோயாளிகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. சுகாதார பணிகள் நிர்வாக கணக்கு அலுவலர் தங்க புஷ்பவதி, தமிழ்நாடு தன்னார்வ குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் டானியல், ஓய்வு பெற்ற மாவட்ட மலேரியா அலுவலர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments