மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் பஜனை ஊர்வலம் நடைபெற்றது. டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும்...
மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் பஜனை ஊர்வலம் நடைபெற்றது.

டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்சுகளும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மணவாளக்குறிச்சி சி.எஸ்.ஐ. ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆலயத்தை சுற்றி ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. சிறப்பு குடில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் மாலையில் சிறப்பு கிறிஸ்துமஸ் பஜனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் பஜனை ஜாதி, மத பாகுபாடின்றி அனைத்து சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்று வருகிறது. அதோடு கிறிஸ்துமஸ் தாத்தா மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.

டிசம்பர் 24-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு பாடல் ஆராதனை நடைபெறுகிறது. 25-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடைபெகிறது.
கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி அன்று மதியம் 2 மணிக்கு கிறிஸ்துமஸ் மர விழா நடைபெறுகிறது.
செய்தி மற்றும் நியூஸ்
டயசன் M.A., B.Ed., M.Phil.
பாம்பே பிரிண்டர்ஸ், மணவாளக்குறிச்சி.
No comments