பஞ்சாப் மாநிலத்தில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த குமரி மாவட்டம் அருமனையைச் சோ்ந்த ராணுவ வீா்ா் சுதீரின்உடல் சனிக்கிழமை சொந்த ஊரில் ராணு...
பஞ்சாப் மாநிலத்தில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த குமரி மாவட்டம் அருமனையைச் சோ்ந்த ராணுவ வீா்ா் சுதீரின்உடல் சனிக்கிழமை சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அருமனை அருகே மாத்தூா் கோணத்தைச் சோ்ந்தவா் சுதீா் (37) . இவா் இந்திய ராணவத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்து விட்டு இவா் மீண்டும் பணிக்குத் திரும்பினாா். பின்னா் அங்கு 15 நாள்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவா் மீண்டும் வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பியுள்ளாா்.
இந்நிலையில் இவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதில் சதீரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனா்.
சொந்த ஊரில் தகனம்: இந்நிலையில் சுதீரின் உடல் சனிக்கிழமை சொந்த ஊரான மாத்தூா் கோணத்திற்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் உறவினா்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா் என திரளானோா் பங்கேற்றனா். உயிரிழந்த சுதீருக்கு தீப்தி என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.
No comments