தமிழக அரசியல் கழத்தில் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு அரசியல் கட்சி, நல்லது செய்தோ அல்லது சர்ச்சையில...
தமிழக அரசியல் கழத்தில் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு அரசியல் கட்சி, நல்லது செய்தோ அல்லது சர்ச்சையில் சிக்கியோ மாட்டிகொண்டு, அதனைதொடர்ந்து சிலநாள்கள் அதுபற்றிய பரபரப்பு நாளிதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் டிரண்டாகி வரும்.

தமிழக அரசியலில் தற்போது பல நிகழ்வுகள் சூடுபிடித்த நிலையில், தமிழ் திரையுலக இளம் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பெயரில் அரசியல் கட்சி தொடங்க விண்ணப்பித்துள்ளார்.
விஜயின் தந்தை, அவரை எப்படியாவது அரசியலில் கொண்டுவந்து முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்ற கனவில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போதைய சூழலில் விஜய்க்கு அரசியல் ஆர்வம் இல்லை என்ற நிலைப்பாடு உள்ளது.
இதனால், விஜய்க்கும், அவரது தந்தை எஸ்ஏசிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தனது அப்பா தொடங்கியிருக்கும் கட்சிக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும், தன்னுடைய பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக்கூடாது எனவும் விஜய், தந்தைக்கு எச்சரிக்கைவிடுத்தார்.
மேலும், விஜயின் ரசிகர்களும் அந்த கட்சியில் சேரக்கூடாது என அன்பு கட்டளையிட்டார். இது விஜயின் தந்தையை கொஞ்சம் தடுமாற வைத்தது. ஆனாலும், அவர் தன்னுடைய கட்சியை செயல்படுத்த உறுதியாக உள்ளார்.
சமூக வலைதளங்களில் விஜயின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் விஜயின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக குமரி மாவட்டத்தில் விஜயின் அரசியல் பற்றி, அவரது ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.
அந்த போஸ்டரில், “சரியான நேரம் வரட்டும், SM பதவியை மக்களே தரட்டும்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டு குமரி மாவட்டம் முழுதும் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் மூலம் அவரது ரசிகர்கள், விஜயின் அரசியல் பிரவேசத்திற்காக மட்டும் காத்திருக்கின்றனர் எனவும், அவரது தந்தையின் அரசியல் கட்சியில் விருப்பம் இல்லை எனவும் தெரிகிறது.
தமிழக அரசியலுக்கும், சினிமாவிற்கும் எப்போதுமே தொடர்புகள் உண்டு. எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றோர்கள் சினிமாவில் இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர்கள். ஆனாலும், சிலரே குறிக்கோளை அடைகின்றனர்.
இப்போதைய சூழலில், செய்திகளில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்புகள் மக்களுக்கு உள்ளன. இதனால் மக்கள் தீர்க்கமான முடிவெடுத்து, தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுத்து கொள்ள முடிகிறது.
தமிழக மக்களால் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினியும் பலவருடங்களாக அரசியல் கழத்தில் குதிக்க தயாராகி வந்த வண்ணம் உள்ளார். கூடிய விரைவில் அவரும் கட்சி ஆரம்பித்து மக்கள் பணி செய்வார் எனக்கூறப்படுகிறது.
வரும் காலங்களில் அரசியலில் எந்த சினிமா நட்சத்திரம் ஜொலிக்கிறார் என்பது காலம் தான் பதில் கூறும் என்றே தெரிகிறது.
No comments