மண்டைக்காட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்ய...
மண்டைக்காட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

இதில் பெரியவர் மேற்பார்வையில் பட்டாசை வெடித்து மகிழுங்கள், திறந்த வெளியில் பட்டாசை வெடியுங்கள், பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளி நீர் பக்கத்தில் இருப்பதை உறுதி செய்யுங்கள் எனவும்,
புஸ்வானம் கொளுத்தும் போது சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொளுத்துங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு அடங்கிய நோட்டீஸை குளச்சல் நிலைய பொறுப்பு அலுவலர் ஜெகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மண்டைக்காடு கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
No comments