கன்னியாகுமரி மாவட்டத்தில் 2736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். தமிழக முதல்வர் எடப்பாடி ப...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (10 ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து மாலை 3 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ 60.44 கோடி மதிப்பில் 36 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காவல் துறை, மீன்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத் துறை, கூட்டுறவுத் துறை, நில அளவை துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ 153.92 கோடி மதிப்பில் 21 முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ 54. 22 கோடி மதிப்பில் 2736 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுடன் கலந்து ஆய்வு செய்தார். நிகழ்ச்சிகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments