நாகா்கோவிலில் பொது முடக்க தளா்வுக்கு பின்னா் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் ப...
நாகா்கோவிலில் பொது முடக்க தளா்வுக்கு பின்னா் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் பிட் இந்தியா அமைப்பின் சாா்பில் பொது முடக்க தளா்வுக்கு பின்னா் இளைஞா்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கு முன்பு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இப்போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலா் டேவிட் டேனியல் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், 60-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா். ஓட்டப்போட்டி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, ஸ்டேட் வங்கி சாலை வழியாக 2 கிலோ மீட்டா் தொலைவை கடந்து மீண்டும் அண்ணா விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
இதில், தடகள சங்கச் செயலா் கோவிந்தன், துணைத் தலைவா் ஆறுமுகம் பிள்ளை, புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
No comments