குமரி மாவட்டம் மாதவலாயம் புதுத் தெருவை சேர்ந்தவர் கனிமுகம்மது . இவரது மனைவி ரம்ஜான்பீவி (வயது 45). இவருக்கு நிஹார் (வயது 22) என்ற மகன் உள்ளா...
குமரி மாவட்டம் மாதவலாயம் புதுத் தெருவை சேர்ந்தவர் கனிமுகம்மது . இவரது மனைவி ரம்ஜான்பீவி (வயது 45). இவருக்கு நிஹார் (வயது 22) என்ற மகன் உள்ளார்.

நிஹார் சென்னையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி சொந்த ஊரான மாதவலாயம் வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் வீட்டுக்கு வெகுநேரமாகியும் திரும்பவில்லை.
இதனால் நிஹாரின் தாய் ரம்ஜான் பீவி அவரை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து ரம்ஜான் பீவி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் விசாரணை நடத்தியதில் ஸ்டேட் பேங்க் ரோடு, தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை என சுசீந்திரம் காவல் நிலையத்தில் காணவில்லை என அந்த பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் நிஹாரின் உறவினர் தெங்கம்புதூரில் இருந்த நிலையில் அவர் அடிக்கடி அங்கு சென்று வந்ததில் இவரும் அந்த இளம்பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதற்காக 28-ஆம் தேதி அன்று கூட்டி சென்றதாகவும் இளம் பெண்ணின் தரப்பினர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
தற்போது நிஹாரின் தாய் மகனை காணவில்லை என ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments