சர்வதேச சுற்றுலாதலமாக விளங்கி வரும் கன்னியாகுமரியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர். தற்போது கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறக...
சர்வதேச சுற்றுலாதலமாக விளங்கி வரும் கன்னியாகுமரியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர். தற்போது கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு சுற்றுலா பயணிகள் ஓரளவிற்கு வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் இன்று (02-10-2020) மாலை வேளையில் சுற்றுலா பயணிகள் பலர் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியை ரசித்து பார்த்தனர்.
சுமார் இரவு 7 மணி அளவில் இருந்து கடல் உள்வாங்கியது. அரை மணிநேரத்தில் கடல் அதிகளவில் உள்வாங்கி, கடல் உள்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அய்யன் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் வரை சென்றது.

கடலில் காணப்பட்ட பாறைகள் தென்பட்டதுடன், தரைப்பகுதியும் தென்பட்டது. இந்த திடீர் மாற்றத்தால் சுற்றுலாப் பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.
பொதுவாக பௌர்ணமி அல்லது அமாவாசை காலங்களில் கடல் சீற்றமோ அல்லது கடல் சிறிது உள்வாங்கியோ காணப்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று பௌர்ணமி நாளாக இருந்த நிலையில், இன்று கடல் உள்வாங்கியுள்ளது.
அதேவேளையில், கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.
போட்டோஸ் உதவி
Jackson Henry (Dhina Murasu)
No comments