தமிழ்நாட்டு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் என்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு வந்த போலந்து நாட்டைசேர்ந்த இளைஞர் கூறினார். மகாத்மா காந்...
தமிழ்நாட்டு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் என்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு வந்த போலந்து நாட்டைசேர்ந்த இளைஞர் கூறினார்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு வந்த போலந்து நாட்டைசேர்ந்த வோய்தேக் (29). அங்குள்ள பல்கலை.,யில் பிஎச்டி.,முடித்துள்ளார். அங்குள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்றுகொடுப்பதற்காகவும், தமிழ் மேல் உள்ள ஆர்வத்தால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் பல்கலை.,யில் சேர்ந்து தமிழ்பயின்று கடின உழைப்பால் தற்போது சரளமாக பேசவும் எழுதவும் கற்றுதேர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் நண்பர் சுரேஷ் மற்றும் பெண்தோழியுடன் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
போலந்து நாட்டிலுள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுப்பதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் வந்தேன். நான் எதிர்பார்த்திருந்ததைவிட விரைவாக தமிழில் பேசவும் எழுதவும் கற்றுகொண்டேன். விரைவில் சொந்த நாட்டிற்கு திரும்புவேன்.
எனக்கு தமிழ் மீதும் காந்தியடிகளின் மீதும் உள்ள அளவுகடந்த அன்பு காரணமாக கன்னியாகுமரி வந்தேன். தமிழ்நாட்டு உணவான தோசை, இட்லி, பொங்கல் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். தமிழ்நாட்டு பெண்களை மிகவும் பிடிக்கும். இங்குள்ள பெண்ணை திருமணம் செய்ய விருப்பம். எதிர்காலத்தில் என்னுடைய விருப்பம் நிறைவேறலாம். இவ்வாறு அவர் கூறினார்
















No comments