குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அற...
குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 1ஆம் தேதி முதல் கிறிஸ்தவ தேவாலயங்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் அதிகளவில் கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் ஆலயத்தில் காலை 7 மணிக்கு திருப்பலி நடைபெற்றது.
இதில், கோட்டாறு மறைமாவட்ட வட்டார முதல்வா் மைக்கேல்ஏஞ்சலூஸ், பங்குத்தந்தை ஸ்டான்லி, இணை பங்குத்தந்தை கிஷோா் கலந்துகொண்டனா்.

திருப்பலியில் கலந்துகொண்டோா் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அமா்ந்திருந்தனா்.
ஆலயத்துக்குள் வரும்போது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனா். கையை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்பட்டது.
இதேபோல் வெட்டூா்ணிமடம் கிறிஸ்து அரசா் ஆலயம், குழித்துறை, மாா்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலி நடைபெற்றது.
No comments