குமரி மாவட்டம், பொழிக்கரை சகாயமாதா தெருவை சேர்ந்தவர் மார்க்கூஸ் (வயது 59). இவர் நேற்று முன்தினம் முட்டம் துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்...
குமரி மாவட்டம், பொழிக்கரை சகாயமாதா தெருவை சேர்ந்தவர் மார்க்கூஸ் (வயது 59). இவர் நேற்று முன்தினம் முட்டம் துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றார்.

அவருடன் அந்தோணி பிரான்சிஸ், ஆரோக்கிய அபிஷேக், மேல்பன்ராய் ஆகியோர் சென்றனர். பொழிக்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மார்க்கூஸ் வள்ளத்தில் தவறி விழுந்தார்.
பின்னர் அவருக்கு முதலுதவி செய்துவிட்டு நேற்று காலை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்தபோது மார்க்கூஸ் இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments