குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் திருடப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதையடுத...
குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் திருடப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதையடுத்து மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இரணியல், குளச்சல், இராஜாக்கமங்கலம் காவல் நிலையம் உள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை தடுக்க தனிப்படையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது ஆம்னி வேனில் வந்த 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறியதால், சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் இரவு நேரங்களில் ஆடு, மாடு திருட்டில் ஈடுபட்டது, தெரிய வந்தது. பிடிபட்ட 3 பேரும் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு திருடிய வழக்குகளில் தொடர்பு உள்ளதும், திருடப்பட்ட ஆடு, மாடுகள் இறைச்சிக்காக பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து குருந்தன்கோடு பகுதியில் திருடப்பட்ட 3 பசுக்கள், 3 ஆடுகள் மற்றும் ஆம்னி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட கால்நடைகளின் மதிப்பி சுமார் ரூ.3 லட்சம் ஆகும். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments