பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட பணக்குடி வனப்பகுதியில் சில மர்ம கும்பல்கள் விலங்குகளை வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல்க...
பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட பணக்குடி வனப்பகுதியில் சில மர்ம கும்பல்கள் விலங்குகளை வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல்கள் வந்தன.

அதன் அடிப்படையில் மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் உத்தரவின்பேரில் பூதப்பாண்டி வனசரக அதிகாரி திலீபன் மேற்பார்வையில் வனவர் பிரன்னா, கணேஷ், சக்திவேல், வனக்காப்பாளர்கள் சுபின், ஜீவானந்தம் மற்றும் வனக்காவலர், வேட்டைதடுப்பு காவலர்கள் பணக்குடி வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
புளியன்விளை பகுதியில் ஒரு பைக்கில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் வன அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பணக்குடி வனப்பகுதியில் அட்டவணை 1-ல் இடம்பெற்றுள்ள உடும்பை வேட்டையாடி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர்கள் பணக்குடியை சேர்ந்த இசக்கி முத்து (38), சகாயஜோஸ் மைக்கில் ராஜா (32) என்பது தெரியவந்தது.
அவர்கள் 2 பேரையும் வனஅதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த உடும்பு ,மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
No comments