குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளச்சல் அருக...
குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளச்சல் அருகே மேலகுறும்பனை புனித அந்தோணியார் குருசடியில் மின்னல் தாக்கி மேல் பகுதியில் இருந்த சிலுவை உடைந்தது.

குருசடியில் இருந்த மின் மீட்டர், இன்வெட்டர், மின் ஒயர்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மிக்சி, டி.வி., பிரிட்ஜ் போன்ற மின்சார பொருட்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்மிடாலம் ‘ஏ’ கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் ரெஜின், குருந்தன்கோடு யூனியன் துணை தலைவர் எனல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இதுபோல், பூட்டேற்றி காஞ்சிரன்காட்டுவிளை பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அந்த பகுதியை சேர்ந்த நேசமணி என்பவர் வீட்டில் மின்னல் தாக்கி வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மேலும், அவரது மனைவி விஜயா (49) மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
No comments