மது கடைக்கு எதிராக போராடிய ஆயர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என குமரி சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
மது கடைக்கு எதிராக போராடிய ஆயர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என குமரி சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குமரி சி.எஸ்.ஐ. பேராயர் ஏ.ஆர்.செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகையே அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக அரசு எடுத்து வரும் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பாராட்டுக்கள். மது ஒழிப்புக்காக மக்கள் முறையிடுவது அல்லது போராடுவது புதிதல்ல. வாழ்வா? சாவா? என்று தவிக்கும் வேளையில் ஊரடங்கால் உழைக்க முடியாமல் போதுமான வருமானம் இல்லாத வேதனையில் தவிக்கின்ற சாதாரண குடிமக்களின் உணர்வினை பிரதிபலிக்கும் விதமாக மதுக்கடைகளை தமிழகத்தில் மூடி ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஆயர்கள், அனைத்து தரப்பு மக்களின் சார்பில் வேண்டுகோளாக விடுத்தனர்.
இந்த வேண்டுகோளை பரிசீலித்து தகுந்த உத்தரவை வெளியிட வேண்டி எதிர்பார்த்தனர். ஆனால் இந்த வேண்டுகோளை பரிசீலிக்காமல், மதுக்கடைகளை திறந்ததால் ஆயர்கள் போராடினர்.
இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. எனவே ஆயர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வருந்தத்தக்கது. எனவே அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு சி.எஸ்.ஐ. பேராயர் ஏ.ஆர்.செல்லையா கூறியுள்ளார்.
No comments