குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 3-ம் தேதி வர...
குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
மருத்துவ சிகிச்சைக்கு கேரள செல்லும் குமரி நோயாளிகள் மாவட்ட கலெக்டரின் அனுமதி கடிதம் பெற்று சென்றாலும் அதனை கேரள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதில் உள்ள நிர்வாக பிரச்சினைகளை களைய தமிழ்நாடு, கேரள தலைமை செயலாளர்கள் சுமூகமாக பேசி நோயாளிகள், பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டைக்காட்டில் வியாபாரம் செய்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த தாஹா (வயது 52) என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கேரளா கொண்டு சென்ற போது கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமாகி அவர் இறந்து போனார். இஞ்சிவிளை சோதனைச்சாவடியில் கேரள போலீசார், சுகாதாரத்துறையினர் அனுமதி அளித்திருந்தால் அவருக்கு தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரை காப்பாற்றியிருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments