கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தமிழகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கு பெரிய அளவிலான நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இதற்காக, முத...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தமிழகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கு பெரிய அளவிலான நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இதற்காக, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தங்களால் முடிந்த தொகையை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், குமரி மாவட்டத்தில் அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களால் முடிந்த நிதி உதவியை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அதன்படி நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் வழங்கினார்.
மேலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 70 போலீசார் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த அதிகாரிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கினர். இந்த தகவலை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
No comments