புதுக்கடை அருகேயுள்ள குன்னத்தூா் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். காப்புக்காடு குன்னத்தூா் பகுதி...
புதுக்கடை அருகேயுள்ள குன்னத்தூா் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காப்புக்காடு குன்னத்தூா் பகுதியில் வீட்டில் நேற்று முன்தினம் இரவில் சாராயம் காய்ச்சுவதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று புகாா் கூறப்பட்ட வீட்டில் சோதனையிட்டனா். அங்கு சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அங்கிருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.
இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியை சோ்ந்த பிரதீப் (வயது 54), பிபின் (வயது 25), மகேஷ் (வயது 38), சிவசந்தரபோஸ் (வயது 32), சசிகுமாா் (வயது 36) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
No comments